தமிழக வீரர் நடராஜன் இதை மட்டும் செய்தால் அவர் உலகக்கோப்பையில் இடம் பிடிப்பது உறுதி! கோஹ்லி ஓபன் டாக்
இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, உலகக்கோப்பை டி20 தொடரில், நடராஜம் இடம் பிடிப்பதற்கு என்ன நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில், தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா தொடரில் கலக்கிய நடராஜன் காயம் காரணமாக விலகியிருந்த நிலையில், அதில் இருந்து மீண்டும் தற்போது அணிக்கு திரும்பி விளையாடினார்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, நடராஜன் தன்னுடைய பிட்னஸை நிரூபித்து விளையாடினால், அவர் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி.
அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும், அவருக்கான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். இனி வரும் போட்டிகள் அவருக்கு வைக்கப்படும் பலப்பரீட்சை என்று கூறியுள்ளார்.
கோஹ்லி சொன்னது போன்றே, நடராஜன் வரும் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பிடிப்பது உறுதி.