மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்த உலகக் கோப்பை கால்பந்து நட்சத்திரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
கொலம்பியாவின் கால்பந்து நட்சத்திரம் லிண்டா கைசெடோ பயிற்சியின் போது சுருண்டு விழுந்துள்ள நிலையில், இனி அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
90 நொடிகள் வரையில்
18 வயதேயான கால்பந்து நட்சத்திரம் லிண்டா கைசெடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னர் சுமார் 90 நொடிகள் வரையில் சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.
@getty
சிகிச்சைக்கு பின்னர், அதே நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறன்று ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
தமது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லிண்டா கைசெடோ, திடீரென்று பயிற்சியை நிறுத்தியவர், மார்பைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, செல்லும் வழியில் அவருக்கு நினைவு திரும்பியதாக கூறுகின்றனர்.
கருப்பை புற்றுநோய்
கொலம்பிய மகளிர் கால்பந்து நம்பிக்கை நட்சத்திரமான லிண்டா கைசெடோ, 15 வயதில், அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அந்த நோய் அவரது கால்பந்து வாழ்க்கையை அழித்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்டது மற்றும் கால்பந்து களத்திற்கு திரும்புவதற்கு முன் ஆறு மாதங்கள் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |