உலகக்கிண்ணம் டி20... இந்தியாவில் இருந்து மாற்றம்
இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபரில் தொடங்கவிருந்த உலகக் கிண்ணம் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.
‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தையும் கடந்த வகையில் ஐபிஎல் வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் எழுந்துள்ளது.
இதுதொடா்பான இறுதி முடிவு ஜூன் மாதம் ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உலகக்கிண்ணம் டி20 போட்டியை இந்தியாவிலிருந்து இடம் மாற்றுவது தொடா்பாக மத்திய அரசின் உயா்நிலை முடிவு மேற்கொள்வோருடன் பிசிசிஐ அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில்,
போட்டியை இடம் மாற்றுவதற்கு பெரும்பாலானோா் அதில் ஒப்புதல் தெரிவித்ததாகத் தெரியவந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.