உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டயா விளையாடுவாரா?
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஹர்திக் பாண்டயா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரின் கால் தவறி விழுந்ததால் இடது கணுக்காலில் ஹர்திக் பாண்டயா காயமடைந்தார்.
இதனால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருடைய தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.
தற்போது, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து கொண்டு அதிலிருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை ஹர்திக் பாண்டயா எடுத்து வருகிறார்.
இந்நிலையில், கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி முன் இன்று அவருக்கு உடற்தகுதி சோதனை செய்த பின்னரே அவர் வரும் தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவரும்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி
இந்த சூழ்நிலையில், வரும் 29 -ம் திகதி லக்னோவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்டயா விளையாட மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நாக் -அவுட் சுற்றுக்கு முன்பு அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு முழு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |