கூட்டத்தோடு கூட்டமாக திரையரங்கில் படம் பார்க்க வந்த உலகப் புகழ் இயக்குநர்! வெளியான வைரல் புகைப்படம்
மக்களை திரையரங்குகளில் படம் பார்க்க வருவதை ஊக்குவிக்கும் விதமாக உலகப் புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்க்க வந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள AMC திரையரங்கம் பல மாதங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்தது நிலையில், திங்கட்கிழமை மீண்டும் திறக்கபட்டது.
மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்து படங்களைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக, திரையரங்கம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, முதல் காட்சியை டிக்கட் வாங்கி பார்த்துள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
Director Christopher Nolan sits in an AMC theatre while waiting for the first screening on reopening day in Burbank, California. Photo by Mario Anzuoni pic.twitter.com/H4v684EXz2
— corinne_perkins (@corinne_perkins) March 16, 2021
அவர் தனது மனைவி Emma Thomas-உடன் பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அரங்கத்திற்குள் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
அவர் Judas and the Black Messiah திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அமெரிக்காவில் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களில் 25 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் சினிமா துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல நாடுகளில் சினிமா துறை மிகப் பெரிய பொருளாதாரத்தை கையாண்டுவறுவது குறிப்பிடத்தக்கது.