மணிக்கு 896 கி.மீ வேகம்... உலகின் மிக வேகமான ரயிலை அறிமுகம் செய்யும் நாடு
இந்தியாவில் கொண்டாடப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ என இருக்க, சீனா உலகின் அதி வேக ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் அதிவேக ரயில்
சீனாவின் CR450 ரயில் தற்போது உலகின் மிக விரைவான அதிவேக ரயிலாக உள்ளது, இது மணிக்கு 896 கிலோமீட்டர் வேகத்தில் சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் புல்லட் ரயில் வரிசையை விடவும் சீனாவின் CR450 ரயில் மிக மிக வேகம் கொண்டது. கண்ணிமைக்கும் நொடியில் கடந்து செல்லும். சீனா தனது CR450 ரயிலை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
சோதனை ஓட்டத்திலேயே, உலகின் அதிவேக ரயில் என்ற பட்டத்தையும் அது பெற்றது. மணிக்கு 896 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ரயிலானது ஜப்பானின் L0 சீரிஸ் மாக்லேவ் ரயிலின் சாதனையான மணிக்கு 603 கிலோமீற்றர் வேகத்தை முறியடித்தது.

பயன்பாட்டிற்கு வரும்போது
சீனா தற்போது அதிவேக ரயில் பயணப் போட்டியில் முன்னிலைப் பெற்றுள்ளது. CR450 ரயில் தற்போது சோதனை ஓட்டத்தின் கீழ் உள்ளது. ஷாங்காய்-செங்டு அதிவேக ரயில் பாதையில் அதிக வேகத்தையும் எட்டியுள்ளது.
சோதனை ஓட்டத்தில் CR450 ரயில் மணிக்கு 896 கி.மீ வேகத்தை எட்டினாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது மணிக்கு 400 கி.மீ என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, புறப்பட்ட நான்காவது நொடியில் மணிக்கு 350 கி.மீ வேகத்தை எட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனா ரயில்வே அறிவியல் அகாடமியால் வடிவமைக்கப்பட்ட CR450 ரயிலை உருவாக்க ஐந்து ஆண்டுகள் ஆனது என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |