இந்தியாவின் முடிவால் உலக நாடுகளுக்கு பலன்.., ரஷ்யாவின் கச்சா எண்ணெய் குறித்து இந்திய அமைச்சர் கருத்து
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் உலக நாடுகளுக்கு பலன் என்று இந்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு பலன்
கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்க ஆரம்பித்தது. இதனை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன.
இதன் விளைவாக, ரஷ்யா தன்னுடைய கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னும் 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய நாடு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு அதிகளவிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசுகையில், "ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்காமல் இருந்தால் சர்வதேச அளவில் கச்சா என்ணெய் விலை 200 டொலரை தாண்டி இருக்கும்.
மேலும், உலக பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்தியா வாங்குவதால் தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டிருக்கிறது.
யார் எங்களுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுக்கிறார்களோ அவர்களிடம் இருந்து தான் வாங்குவோம். எங்களை பொறுத்தவரை மக்களின் சுமையை குறைக்க வேண்டும். தற்போது, இந்தியாவின் முடிவால் உலக நாடுகளுக்கு பலன் கிடைத்துள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |