உலகின் முதல் smartphone இதுதான்! அப்பவே இவ்வளவு சிறப்பம்சங்களா? விலையை பாருங்க
உலகின் முதல் ஸ்மார்ட்போன் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1994.
அப்போதே அதன் விலை 899 டொலர்கள்.
உலகின் முதல் ஸ்மார்ட்போனின் பெயர் சைமன் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த போனை அறிமுகம் செய்தது பலரும் நினைப்பது போல நோக்கியா, மோட்டோரோலோவோ அல்லது ஆப்பிளும் இல்லை. ஐ.பி.எம் நிறுவனம் தான்..! அதன்படி 1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி தான் முதல் ஸ்மார்ட்போனான சைமன் அறிமுகமானது.
ஐபிஎம் பர்சனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அரை கிலோ எடைக்கு மிகவும் கனமான ஸ்மார்ட்போனாக தான் இது தயாரானது.
23 செ.மி நீளம் கொண்ட அதை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை. ட்ச ஸ்கிரீன் தொழில்நுட்பமும் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் எழுதுவதற்கான சாப்ட்வேர் இருந்தது. நாட்காட்டி இருந்தது. அதில் நிகழ்ச்சிகளை குறித்துக்கொள்ளலாம். இதன் வழியே பேக்ஸ் அனுப்பலாம்,பெறலாம். இவ்வளவு ஏன், செயலிகளும் (ஆப்ஸ்) இதில் இருந்தன.சில கேம்களும் இருந்தன.
news18
இதில் போனும் பேசலாம். ஆனால் இண்டெர்ண்ட் வசதி கிடையாது. இதெல்லாம் ஒரு ஸ்மார்ட் போனா ? என்று அலட்சியமாக கேட்கலாம். ஆனால், 1994 ல் இது மிகப்பெரிய விஷயம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த போனின் விலை 899 டொலர்கள். அதிலும் 1994ல் இந்த விலை! அந்த கால வர்த்தக புள்ளிகள் இதை மிகவும் விரும்பினர். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் இந்த போன் சந்தையில் நீடிக்கவில்லை. இதன் பேட்டரி ஆயுள் ஒரு மணி நேரம் தான் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
Rob Stothard/Getty