உலகில் எந்த ஆணுக்கும் நேர்ந்திடாத துன்பம்! உறவின் போது பிரித்தானிய நபருக்கு ஏற்பட்ட சொல்லமுடியாத சம்பவம்
மருத்துவ வரலாற்றில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, பிரித்தானிய இளைஞர் ஒருவருக்கு உடலுறவின் போது துன்பகரமான சம்பவம் நேர்ந்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது இளைஞர் ஒருவருக்கு உலகிலேயே முதல் முறையாக பிறப்புறுப்பு செங்குத்தாக உடைந்துள்ளது. அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த வழக்கு British Medical Journal-ல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தனது துணையுடன் உடலுறவு கொள்ளும்போது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்கள் கூறுகையில், அவரது பிறப்புறுப்பு அவரது துணைவியின் பெரினியம், ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையிலான பகுதியில் மாட்டி வளைந்துவிட்டதாக கூறினர்.
ஆணின் பிறப்புறுப்பில் எலும்புகள் இல்லை. ஆனால், பிறப்பு உறுப்பிற்கு இரத்தத்தை செலுத்தும் விறைப்பு திசுவைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அடுக்கு "அசாதாரண வளைவு" காரணமாக சேதமடையும் போது உடைகிறது. இதனால் பிறப்புறுப்பு மிகவும் வீங்கி, காயமடைந்தது.
மருத்துவ வரலாற்றில் இதுவரை பிறப்புறுப்பு முறிவு என்பது கிடைமட்டமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு வேறுபட்டது மற்றும் ஒரு புதிய வகை என கூறியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த மனிதனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது, மேலும் அவரது பிறப்புறுப்பு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது.
ஆண் பிறப்புறுப்பு எலும்பு முறிவுகளில் 88.5 சதவிகிதம் உடலுறவின் போது ஏற்படுவதாக சிறுநீரக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசயமான வழக்கு மேலும் ஆராய்ச்சிக்கான கதவுகளைத் திறந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது பிறப்புறுப்பின் செங்குத்து முறிவைப் பற்றி ஆராய்ந்து வருவதாக British Medical Journal-ல் கூறப்பட்டுள்ளது.