உலகின் முதல் யூடியூப் வீடியோ எது தெரியுமா?
உலகில் முதன் முறையாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோ தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய சூழலில் எதற்கெடுத்தாலும் யூடியூப் தான், எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கென்று யூடியூப் கணக்கு ஒன்றை உருவாக்கி தங்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கூட பதிவேற்றி வருகின்றனர், இதன்மூலம் சம்பாதிக்கவும் செய்கின்றனர்.
ஆனால் முதன்முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ பற்றி உங்களுக்கு தெரியுமா?
சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2005ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி வீடியோ பதிவேற்றப்பட்டிருக்கிறது.
வெறும் 18 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், யூடியூப் நிறுவனரான ஜாவேத் கரிம், உயிரியல் பூங்காவில் யானைகள் கூட்டத்தின் முன் நின்று கொண்டு, ”நான் உயிரியல் பூங்காவில் இருக்கிறேன்” என கூறுகிறார்.
இது தான் பிரபலமும் அடைந்திருக்கிறது, யூடியூப் எனவும் பெயரிட்டுள்ளனர், சுமார் 18 மாதங்கள் கழித்து கூகுள் யூடியூப்-பை வாங்கியிருக்கிறது.