உலகின் தனிமையான வீடு விற்பனைக்கு வருகிறது! விலை என்ன தெரியுமா? ஆச்சரிய புகைப்படங்கள்
உலகின் தனிமை வீடு $459,000 விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
இந்த வீடானது அமெரிக்காவின் கடலோர மாகாணமான மைனேவில், மிகச்சிறிய ஆள் அரவமற்ற டக் லெட்ஜஸ் தீவில் அமைந்துள்ளது.
இந்த வீட்டை சுற்றி வேறு வீடுகளே கிடையாது என்பது முக்கிய அம்சமாகும். இது 50 சதுர மீட்டர் பெரியதாகும், இந்த தீவு மொத்தமாக 6000 சதுர மீட்டர் தான் கொண்டுள்ளது.
வீட்டின் இருபுறமும் தண்ணீர் உள்ளது. இதில், ஒரு படுக்கை அறை மட்டுமே உள்ளது. இருப்பினும், அறையின் உள்புறம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த வீட்டில் தங்கு வோர், பிறர் தொந்தரவு இல்லாமல் கடலின் அழகை முழுமையாக ரசிக்கலாம். அதே நேரம் இங்கு குளியலறை கிடையாது.
இந்த வீடானது அமெரிக்க-கனடிய எல்லையில் உள்ள ஜஸ்ட் ரூம் எனஃப் தீவில் காணப்படும் வீடுகளை போன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.