சிட்னி மற்றும் லண்டன் இடையே வர உள்ள உலகின் நீண்ட நேர விமான சேவை - எப்போது தெரியுமா?
அவுஸ்திரேலியாவை சேர்ந்த குவாண்டாஸ் விமான நிறுவனம், உலகின் நீண்ட நேர விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
20 மணி நேர பயணம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் பிரித்தானியாவின் லண்டன் நகரங்களுக்கு இடையே, உலகின் முதல் நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது.
இதன் பயண தூரம் 17,015 கிமீ இருக்கும் எனவும், இதன் பயண நேரம் 20 மணி நேரமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது, பயணிகள் 2 சூரிய உதயத்தை காண முடியும் என்பதால், இதற்கு Project Sunrise என குவாண்டாஸ் பெயரிட்டுள்ளது. இந்த சேவை 2027 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கிற்கு இடையே 18.5 மணி நேரத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நேரடி சேவையே நீண்ட நேர விமான சேவையாக உள்ளது.
விமானத்தில் உள்ள வசதிகள்
20 மணி நேர பயணத்தை மிகவும் வசதியாக மாற்ற, அதிக கால் இடவசதிக்காக, வழக்கமான 300 இருக்கைகள் கொண்ட இருக்கை வசதி 238 ஆகக் குறைக்கப்படும்.
முதல் வகுப்பு பயணிகளுக்கு, ஒரு நாற்காலி, படுக்கை, ஒரு அலமாரி மற்றும் 32 அங்குல HD திரை ஆகியவற்றை உள்ளடக்கிய தனியார் சூட்டை அனுபவிப்பார்கள். மேலும், வெளிச்சம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த ஒரு டேப்லெட்டும் வழங்கப்படும்.
வணிக வகுப்பு பயணிகளுக்கு, 25 அங்குல அகல இருக்கை, 3 அடி 9 அங்குல உயர சுவர்கள் மற்றும் ஒரு நெகிழ் கதவு, 18 அங்குல திரை ஆகியவை கிடைக்கும்.
பிரீமியம் எகானமி பயணிகள் 40 அங்குல இருக்கையுடன், 13.3 அங்குல திரையை அனுபவிப்பார்கள். எகானமி பயணிகள் 33 அங்குல இருக்கையுடன், 13.3 அங்குல திரையை அனுபவிப்பார்கள்.
அனைத்து பயணிகளும் அணுகக்கூடிய வகையில், எகானமி மற்றும் பிரீமியம் கேபின்களுக்கு இடையே ஒரு பிரத்யேக "ஆரோக்கிய மண்டலம்" நிறுவப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |