உலகின் மிக நீளமான மூக்குடைய மனிதர்! வைரலாகும் புகைப்படம்
உலகின் மிக நீளமான மூக்குடைய மனிதரின் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், ஹிஸ்டாரிக் விட்ஸ் என்பவரின் டுவிட்டர் பக்கத்தில் உலகின் மிக நீளமான மூக்குடைய மனிதரின் புகைப்படம் வெளியிடப்பட்டது.
இதனை பார்த்த பலரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை நினைவுப்படுத்துவதாக கமெண்டுகள் பதிவிட வைரலானது.
அவரின் பெயர் தாமஸ் வெடர்ஸ் என்பதும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
யார் அவர்?
இங்கிலாந்தில் வசித்து வந்த தாமஸ் வெடர்ஸ், உலகின் மிக நீளமான மூக்கினை கொண்டிருந்தார்.
சர்க்கஸ் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அக்கால மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கினார்.
அப்போது கமெராக்கள் ஏதும் இல்லாததால் அவரின் புகைப்படம் ஏதுமில்லை, எனினும் மெழுச் சிலைகள் மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும் தொழில்நுட்ப ரீதியாக அவரின் புகைப்படத்தை வடிவமைத்துள்ளனர்.
இவரது மூக்கின் நீளம் 7.5 அங்குலமாகும். அதாவது 19 செ.மீ ஆகும்.
Thomas Wadhouse was an English circus performer who lived in the 18th century. He is most famously known for having the world's longest nose, which measured 7.5 inches (19 cm) long. pic.twitter.com/Gx3cRsGXxd
— Historic Vids (@historyinmemes) November 12, 2022
அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை
Ripley’s Believe It Or Not அருங்காட்சியகத்தில் தாமஸ் வெடர்ஸின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கின்னஸ் சாதனை புத்தகத்திலும், இவர் பற்றிய குறிப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய 50வது வயதில் மரணமடைந்த தாமஸ் வெடர்ஸெ, இன்று வரை உலகின் நீளமான மூக்குடைய மனிதராக அறியப்படுகிறார்.