உலகின் மிக விலையுயர்ந்த மாளிகை... முகேஷ் அம்பானியின் ஆன்டிலியாவை விட பல மடங்கு மதிப்பு
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மிகவும் விலையுயர்ந்த மாளிகை ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
மாளிகையின் மொத்த மதிப்பு
ஆன்டிலியா என அறியப்படும் அந்த மாளிகையின் மொத்த மதிப்பு சுமார் 15,000 கோடி என்றே கூறப்படுகிறது. இருப்பினும், முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா உலகின் மிக விலையுயர்ந்த வீடு அல்ல.
உலகின் மிக விலையுயர்ந்த மாளிகை பக்கிங்ஹாம் அரண்மனை என்றே கூறப்படுகிறது. பிரித்தானிய அரச குடும்பத்தினரின் வசிப்பிடம் இது.
1703ல் பக்கிங்ஹாம் டியூக் என்பவரால் கட்டப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு மற்றும் நிர்வாக தலைமையகமாகும் இந்த மாளிகை. அதன் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினர் தங்கள் வசிப்பிடமாக பாதுகாத்து வருகின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில் விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து பிரித்தானிய ராணியாராக முடிசூட்டிய பின்னர் அரண்மனை மீண்டும் கட்டப்பட்டது.
பக்கிங்ஹாம் அரண்மனை
தற்போது, பக்கிங்ஹாம் அரண்மனையில் 19 ஸ்டேட்ரூம்கள், அரச குடும்பத்தார் மற்றும் விருந்தினர்களுக்கு 52 படுக்கையறைகள், ஊழியர்களுக்கு 188 படுக்கையறைகள், 92 அலுவலகங்கள் மற்றும் 78 குளியலறைகள் உட்பட 775 அறைகள் உள்ளன.
தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 40,789 கோடி இருக்கும் என்றே பக்கிங்ஹாம் அரண்மனை குறித்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதவது முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா மாளிகையை விட மூன்று மடங்கு மதிப்பு என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |