உலகின் விலையுயர்ந்த அபூர்வ ஓவியம்: யாரிடம் உள்ளது தெரியுமா?
உலகிலேயே அதிக விலையுள்ளது என கருதப்படும் ஓவியம் ஒன்று, ஜெனீவாவில் ஒரு சேமிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் விலையுயர்ந்த அபூர்வ ஓவியம்
உலகின் விலையுயர்ந்த ஓவியம் என கருதப்படும் ‘Salavatore Mundi’ என்னும் அபூர்வ ஓவியம், புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்டது என கருதப்படுகிறது.
இந்த அபூர்வ ஓவியம், 2017ஆம் ஆண்டு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
யாரிடம் உள்ளது தெரியுமா?
தற்போது அந்த ஓவியம், ஜெனீவாவிலுள்ள துறைமுக சேமிப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
அதை வாங்கியவர் சவுதி பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் என கருதப்படுகிறது.
இளவரசர் சல்மான், ரியாதில் அமைக்கப்பட உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் அந்த ஓவியத்தை வைக்க விரும்புகிறாராம்.
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருபவரான சல்மான், அந்த ஓவியத்தை ரியாதில் அமைக்கப்பட இருக்கும் அருங்காட்சியகத்தில் வைப்பதால், அது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் என நம்புவதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |