உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ : இது இருந்தால் போதும் நீங்க பணக்காரர் தான்!
உலகிலேயே மிக விலை உயர்ந்த பூவின் விலை பார்வையாளர்களை தலைசுற்ற வைத்துள்ளது.
உலகில் விலையுயர்ந்த பூ
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூவாக குங்குமப்பூ காணப்படுகிறது. இது குறைந்தளவிலான இடங்களில் மாத்திரமே விளையும். ஆண்டின் சில மாதங்களில் கிடைக்கும்.
இந்ந பூவானது குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்முவில் உள்ள கிஷ்த்வார் மற்றும் ஜன்னத்-இ-காஷ்மீரில் உள்ள பாம்பூர் போன்ற பகுதிகளில் முக்கியமாக வளர்க்கப்படும்.
இது 15 முதல் 25 செமீ உயரத்தில் வளரும். ஒரு செடியில் விதைகள் இல்லாமல் 2-3 பூக்கள் மட்டுமே கிடைக்கும். ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை 3 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
இது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருளாக காணப்படுகிறது.
குங்குமப்பூவில் உள்ள நன்மைகள்
குங்குமப்பூ என்பது ஒரு மசாலா பொருள். ஆனால் மருந்துவ குணம் நிறைந்துள்ளது என பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இது பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் காலங்களின் முன்பாக ஏற்படும் மன அழுத்தம் , மற்றும் பொதுவான எடை இழப்பு ஆகியவற்றை குணப்படுத்தும்.
கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பேறு கால நாட்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் பிறக்க உள்ள குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.
தாவர இராச்சியத்தில் மற்றொரு இலாபகரமான போட்டியாளர் வெண்ணிலா ஆகும். ஒரு கிலோவுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிடைக்கும், வெண்ணிலா அதன் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு செல்வத்தின் ஆதாரமாக இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |