ஒரு கிலோ ரூ.29 லட்சம்.. உலகிலேயே விலையுயர்ந்த 6 உணவுகளின் பட்டியல் இதோ
உணவு என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று.
முதலில் உணவு என்பது பசிக்காகவும், ஆற்றலுக்காகவும் மட்டும் இருந்தது. நாகரீக வளர்ச்சியில் ருசிக்காக பல்வேறு விதமான உணவுகள் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில், உலகிலேயே அதிக விலையுள்ள 6 உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.
வெள்ளை ட்ரஃபிளஸ் (White truffles)
இத்தாலி நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கிடைக்கும் இந்த அரிதான உணவு வகை மிகவும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றன.
அரை கிலோ வெள்ளை ட்ரஃபில்ஸ் 3,000 அமெரிக்கா டாலர் மதிப்பில் ( இந்திய மதிப்பில் ரூ.2,49,125) விற்கப்படுகின்றன. உலகிலேயே அதிக விலையுள்ள பூஞ்சைகளில் இதுவும் ஒன்று.
கோபி லூவாக் காபி (Kopi luwak coffee)
சிவெட் காஃபி என அழைக்கப்படும் கோபி லூவாக் காஃபி, மிகவும் தனித்துவமான முறையில் தயாரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக உலகிலேயே மிகவும் அதிகமான விலையுள்ள காஃபியாக அறியப்படுகிறது. ஒரு கப் லூவாக் காஃபியின் விலை ரூ.8,000.
குங்கமப்பூ
சிவப்பு தங்கம் என அழைக்கப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் விலையுள்ள மசாலா பொருளாக அறியப்படுகிறது.
இதை அறுவடை செய்ய அதிக வேலையாட்கள் தேவைப்படுவதால் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை ரூ.800 முதல் ரூ.2,000 வரை உள்ளது.
StockStudioX/Getty Images
யூபாரி கிங் பழம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யூபாரி கிங் பழம், உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள பழமாக அறியப்படுகிறது.
மாட்ஸுடேக் காளான் (Matsutake mushroom)
ஜப்பான் உணவில் முக்கிய அங்கமாக இருக்கும் மாட்ஸுடேக் காளான், உலகிலேயே மிகவும் சுவைமிகுந்த பூஞ்சையாக அறியப்படுகிறது.
இதன் விலை, அரை கிலோ மாட்ஸுடேக் காளானின் விலை ரூ.82,000 ஆகும்.
அல்மாஸ் கேவியார்(Almas Caviar)
ஈரான் நாட்டின் பெலுகா பகுதியில் உள்ள மீன்களின் முட்டையிலிருந்து இந்த உணவு செய்யப்படுகிறது.
உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள மீன் உணவாக கருதப்படும் அல்மாஸ் கேவியார், ஒரு கிலோ ரூ.29 லட்சத்திற்கு கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |