அமெரிக்காவில் பிறந்த உலகின் வயதான குழந்தை - மருத்துவ உலகில் நடந்த அதிசயம்
அமெரிக்காவில் பிறந்த குழந்தை ஒன்று, உலகின் வயதான குழந்தை என அழைக்கப்படுவதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
30 ஆண்டு பழமையான கரு
அமெரிக்காவை சேர்ந்த தற்போது 64 வயதான Linda Archerd என்ற பெண் கடந்த 1994 ஆம் ஆண்டு IVF முறையில் குழந்தை பெற முயற்சித்தார்.
அப்போது 4 கருக்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு கரு மூலம் தனது மகளை பெற்றெடுத்தார்.
மீதமுள்ள 3 கருக்களை அழிக்கவோ, முன்பின் அறியாத ஒருவருக்கு வழங்கவோ தானம் செய்யவோ விரும்பவில்லை. ஆண்டுக்கு 1000 டொலர்கள் மேல் செலவழித்து, அந்த 3 கருக்களையும் கிரையோபிரேசர்வ் செய்து பாதுகாத்து வந்தார்.
கருவைத் தத்தெடுப்பதை எளிதாக்கும் ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டத்தைக் கண்டுபிடித்தார். இதில் அவர் பெற்றோர்களை தேர்வு செய்யலாம். பெற்றோர் மற்றும் குழந்தையை சந்திக்கவும் செய்யலாம்.
உலகின் வயதான குழந்தை
இதே போல், அமெரிக்காவின் ஹியோவைச் சேர்ந்த Tim Pierce(34) மற்றும் Lindsey Pierce(35) தம்பதியினர் 7 ஆண்டுகளாக குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஸ்னோஃப்ளேக்ஸ் திட்டத்தை பற்றி அறிந்த அவர்களுக்கு, Linda Archerd-இன் கரு மூலம் குழந்தை பெற்று கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த கரு பாதுகாப்பாக லிண்ட்ஸியின் கருப்பைக்கு மாற்றப்பட்டது. அந்த கரு வளர்ந்து, ஜூலை 26, 2024 அன்று குழந்தையாக பிறந்தது.
Thaddeus Daniel Pierce என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை உலகின் வயதான குழந்தை என அழைக்கப்படுகிறது.
குழந்தையயின் உயிரியல் தாயான Linda Archerd, புகைப்படம் மூலம், குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |