உலகின் மிக வயதான பெண் காலமானார்: அவரின் வயது என்ன?

Spain
By Sivaraj Aug 21, 2024 03:20 AM GMT
Report

ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானார். 

மரியா பிரான்யாஸ்

அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரா (Maria Branyas Morera) என்ற பெண், பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டனின் மறைவுக்குப் பின் உலகில் அறியப்பட்ட மிகவும் வயதான நபராக, Gerontology ஆராய்ச்சி குழுவால் பட்டியலிடப்பட்டார்.

இவர் 1907ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். பின் அவர் குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

பிரான்யாஸ் முதலாம் உலகப்போரின்போது அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்ற நினைவுகள் தனக்கு இருப்பதாக கூறியிருந்தார். 

world old lady maria branyas dies at 117 

117வது வயதில் 

இந்த நிலையில், கடந்த 2 தசாப்தங்களாக முதியோர் இல்லத்தில் வாழ்வை கழித்த பிரான்யாஸ், தனது 117வது வயதில் உயிரிழந்துள்ளார். 

அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள் மோசடி..வெளியான பின்னணி

அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள் மோசடி..வெளியான பின்னணி

பிரான்யாஸ் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், "மரியா பிரான்யாஸ் தூக்கத்தில், நிம்மதியாக, வலியின்றி அவர் விரும்பிய வழியில் எங்களை பிரிந்துவிட்டார்" என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரான்யாஸ் தனது குடும்பத்தினரிடம், "எப்போது என்று எனக்கு தெரியாது, ஆனால் மிக விரைவில் இந்த நீண்ட பயணம் முடிவுக்கு வரும். இவ்வளவு வாழ்ந்ததால் மரணம் என்னை சோர்வடையச் செய்யும். ஆனால் நான் அதை ஒரு புன்னகையுடன் சந்திக்க விரும்புகிறேன், சுதந்திரமாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.    

world old lady maria branyas dies at 117

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US