உலகில் யாருக்குமே இல்லாத ரத்த வகை - இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்
பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 48 ரத்த வகைகள் உள்ளது.
இதில் சில ரத்த வகைகள் மற்றும் உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். மற்ற ரத்த வகைகள் அரிதாக சிலருக்கே இருக்கும்.
48 வது ரத்த வகை, பிரான்ஸின் பாரிஸை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள ரத்த வகை
இந்நிலையில், தற்போது இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் யாருக்குமே இல்லாத புதிய ரத்த வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த 38 வயதான பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு என்ன ரத்த வகை என்பதை அங்குள்ள மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. அவரது குடும்பத்தில் யாருக்கும் அந்த ரத்த வகை பொருந்தவில்லை.
வழக்கத்திற்கு மாறாக, அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பெண்ணின் ரத்தம் "ORH பாசிட்டிவ்" வகையை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்துக்கு பெண்ணின் ரத்த மாதிரி அனுப்பி பரிசோதித்த போதும், ரத்த சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையிலே இருந்துள்ளது.
CRIB ரத்த வகை
இதனை தொடர்ந்து, ரத்த மாதிரி லண்டனில் உள்ள சர்வதேச ரத்தக் குழு குறிப்பு ஆய்வகத்துக்கு (International Blood Group Reference Laboratory (IBGRL) அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு 10 மாதங்கள் நடைபெற்ற விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், ரத்தத்தில் புதிய வகை ஆன்டிஜென் குரோமர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ரத்தவகைக்கு 'CRIB' என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளனர். இதில் CR என்பது குரோமரையும், IB இந்தியா மற்றும் பெங்களூருவையும் குறிக்கிறது.
கோலாரை சேர்ந்த இந்த பெண்ணுக்கு உள்ள ரத்த வகை உலகில் இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |