ஒரே ஒரு குடும்பம்... முகேஷ் அம்பானியைவிட கோடீஸ்வரர்கள்: அவர்களின் மொத்த சொத்து மதிப்பு
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் குடும்பம் என அறியப்படுவது சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் குடும்பத்தினரையே.
மொத்த சொத்து மதிப்பு 116.3 லட்சம் கோடி
இவர்களின் சொத்து மதிப்பு போலவே, இந்த குடும்பத்தினரின் எண்ணிக்கையும் வாயைப் பிளக்க வைப்பதாகவே உள்ளது. சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர் என்கிறார்கள்.
@reuters
அதாவது இந்திய பண மதிப்பில் 116.3 லட்சம் கோடி. சவுதி மன்னர் குடும்பத்தில் மொத்தம் 15,000 உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகின்றனர். இவர்களின் மொத்த வருவாயும் நாட்டில் உள்ள பாரிய எண்ணெய் வளங்களிலிருந்து பெறப்படுகிறது.
மேலும், இந்த குடும்பத்தில் தற்போதைய மிகப் பெரிய கோடீஸ்வரர் அல்வலீத் பின் தலால் அல் சவுத் என கூறப்படுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலர் என்கிறார்கள்.
அல் யமாமா அரண்மனை
ஆனால் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மற்றும் அவரது மகன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் அவர்களின் உண்மையான நிகர சொத்து மதிப்பை இதுவரை வெளியிடவில்லை.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் 4 மில்லியன் சதுர அடி கொண்ட அல் யமாமா அரண்மனையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 400 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒரு சூப்பர் படகும் சொந்தமாக உள்ளது.
மட்டுமின்றி, சொந்தமாக போயிங் 747-400 ரக உலகின் மிகப் பெரிய வணிக, சொகுசு விமானமும் இவர்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |