உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம்: ரூ.25,000 கோடியை 27 நாளில் இழந்த எலான் மஸ்க்
உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பிரான்ஸ் நாட்டின் பெர்னார்ட் அர்னால்ட் தட்டிச் சென்றுள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரர்
உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
இவர் லூயிஸ் உய்ட்டன்(Louis Vuitton) என்ற பிரபலமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
லூயிஸ் உய்ட்டன்(Louis Vuitton) உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட்(Bernard Arnault) மொத்த சொத்து மதிப்பு சுமார் 207.8 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
இதற்கு அடுத்தப்படியாக டெஸ்லா மற்றும் X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கின்(Elon Musk) சொத்து மதிப்பு சுமார் 204.7 பில்லியன் டொலராக உள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் ஜெஃப் பெசோஸ் மற்றும் 8வது இடத்தில் பில் கேட்ஸும் உள்ளனர்.
மிகப்பெரிய சரிவை சந்தித்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் 2024ம் ஆண்டு தொடங்கிய முதல் 27 நாட்களில் மட்டும் $30.5 பில்லியன் அமெரிக்க டொலர்(ரூ.25,000 கோடி) சொத்தை இழந்துள்ளார்.
2024 ஜனவரி 1ம் திகதியில் எலான் மஸ்க்கின் சொத்து சுமார் $299 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டு இருந்தது, ஆனால் 2024 ஜனவரி 26ம் திகதி சந்தை வர்த்தகத்தின் முடிவில் 13.3% சதவீதம் $204.7 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.
2024ம் ஆண்டின் தொடக்க வாரத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளுக்கான நிறுவனமான டெஸ்லாவின் மதிப்பு $94 பில்லியன் டொலர் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |