உலகின் பணக்கார கைதி... பிரமிக்க வைக்கும் இவரது சொத்து மதிப்பு
முன்னாள் பினான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாவோ அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மிகப் பெரிய பணக்காரர் என்றே கூறப்படுகிறது.
சட்டங்களை மீறியதை
முன்னாள் பினான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான Changpeng Zhao நான்கு மாத சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க பணமோசடி எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைச் சட்டங்களை மீறியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கிரிப்டோகரன்சி தொழிலில் செல்வாக்கு மிகுந்த நபராக ஜாவோ அறியப்பட்டார். மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனத்தை நிறுவியவர் ஜாவோ.
தற்போது FTX நிறுவனத்தின் Sam Bankman-Fried என்பவரை அடுத்து, சிறை தனடனை அனுபவிக்கும் நபராக ஜாவோ அறியப்படுகிறார். அமெரிக்க சிறையில் இருக்கும் மிகவும் செல்வந்தரான நபர் ஜாவோ என்றே கூறப்படுகிறது.
இவரது மொத்த சொத்து மதிப்பு 43 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. இந்திய பண மதிப்பில் ரூ 360969 கோடி. ஜாவோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும் அவரது சொத்து மதிப்பு அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.
3 ஆண்டுகள் வரையில்
விசாரணை மற்றும் கைது நடவடிக்கையை அடுத்து ஜாவோ பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். ஆனால் அவரது மிக நெருக்கமான கூட்டாளிகள் பலர் தற்போதும் பினான்ஸ் நிறுவனத்தில் முதன்மையான பொறுப்புகளில் உள்ளனர்.
மேலும் பினான்ஸ் நிறுவனத்தின் 90 சதவிகித பங்குகள் தற்போதும் ஜாவோ வசம் உள்ளது. அவர் மீதான வழக்கில் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கோரப்பட்டது. ஆனால் நீதிபதி அவருக்கு 4 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை விதித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |