எலான் மஸ்க், அம்பானியைவிடவும்... உலகிலேயே பெரும் கோடீஸ்வர குடும்பம்: இவர்களின் சொத்து மதிப்பு
உலகில் பெரும் கோடீஸ்வரராக அறியப்படுபவர் டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க். இவருக்கு அடுத்து, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி.
1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்
ஆனால் சவுதி அரேபியா ராஜ குடும்பத்து மொத்த சொத்து மதிப்பு என்பது எலான் மஸ்க், முகேஷ் அம்பானி உள்ளிட்ட பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்புக்கும் மிக மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.
தோராயமாக 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என கூறுகின்றனர். உலகிலேயே பெரும் கோடீஸ்வர குடும்பம் இது என்கிறார்கள். சவுதி ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் மொத்தம் 15,000 பேர்கள். இவர்களை வழி நடத்துபவர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்.
இவர்களின் பெரும்பாலான வருவாய் என்பது நாட்டின் எண்ணெய் வயல்களில் இருந்தே ஈட்டுகின்றனர். இந்த குடும்பத்தின் மிகப் பெரிய செல்வந்தராக கூறப்படுபவர் Alwaleed bin Talal Al Saud. இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
ஆனால், மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் தங்கள் சொத்து மதிப்பை இதுவரை வெளியிட்டதில்லை என்றே கூறப்படுகிறது. மன்னர் சல்மானின் மாளிகை என்பது 4 மில்லியன் சதுர அடியில் வியாபித்துள்ளது.
மிகப்பெரிய வணிக விமானம்
சுமார் ஆயிரம் அறைகள் கொண்ட Al Yamamah மாளிகையானது திரையரங்கம், நீச்சல் குளங்கள் மற்றும் மசூதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னர் குடும்பத்தினருக்கு சொந்தமாக ஆடம்பர படகுகள், தங்கத்தால் இழைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர்.
400 மில்லியன் டொலர் மதிப்பிலான சொகுசு படகு ஒன்றும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது. மட்டுமின்றி, ஆடம்பர பயணிகள் கப்பல்கள் பல சவுதி அரச குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.
மட்டுமின்றி இவர்களின் தொலைதூர பயணங்களுக்காக Boeing 747-400 என்ற உலகின் மிகப்பெரிய வணிக விமானம் ஒன்றும் இவர்களிடம் உள்ளது. மேலும், Turki bin Abdullah என்பவருக்கு மட்டுமே 22 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பல முதன்மை நிறுவனங்களின் கார்கள் வரிசை உள்ளது.
சவுதி அரேபியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் முதலீடு தொடர்பில் அறியப்படும் நபர் இந்த Turki bin Abdullah என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |