முகேஷ் அம்பானி, எலோன் மஸ்க் ஆகியோரை விடவும்... உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரப் பெண் இவர்
சமகால வரலாற்றில் பெரும் கோடீஸ்வரர்கள் என்றாலே, எலோன் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் பெயர்களே நினைவுக்கு வரும்.
மிகப்பெரிய கோடீஸ்வரப் பெண்
ஆனால் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், இவர்கள் அனைவரின் மொத்த சொத்துக்களையும் விஞ்சும் அளவுக்கு பெரும் நிதிகளை திரட்டி, தங்கத்தில் குளித்திருக்கிறார் சீனாவின் வூ மகாராணி.
வரலாற்றில் பதிவான தரவுகளின் அடிப்படையில் பேரரசி வூ அவர் வாழ்ந்த சகாப்தத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரப் பெண்ணாக குறிப்பிடப்படுகிறார். சில வரலாற்றாசிரியர்கள் அவரை உலகில் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் கோடீஸ்வரப் பெண் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பேரரசி வூவின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர் என்றே கணக்கிடப்படுகிறது. அதாவது மஸ்க், முகேஷ் அம்பானி, பெசோஸ் மற்றும் அதானி உள்ளிட்டவர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் நிகராகாது என்றே கூறுகின்றனர்.
பலமடங்கு செழித்தது
டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ மதிநுட்பம் மிகுந்த ஆட்சியாளர் என்றே கூறப்படுகிறது. தாம் ஆட்சியில் தொடர சிறந்த நிபுணர்களை தம்முடன் பணிபுரிய வைத்துள்ளார். மட்டுமின்றி, தமது வாழ்நாளில் ஆட்சி கைவிட்டு செல்லக்கூடாது என்பதால், சொந்த பிள்ளைகளையே நாடுகடத்தியவர் என்றும் கூறப்படுகிறது.
சுமார் 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த வூ சீனப் பேரரசை மத்திய ஆசியாவில் விரிவடையச் செய்துள்ளார். அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் பலமடங்கு செழித்தது, தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமகால சீன மக்களுக்கு அவரது பெருமையை உணர்த்தும் பொருட்டு, தொலைக்காட்சி தொடராகவும் திரைப்படமாகவும் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |