முகேஷ் அம்பானியை விடவும்... உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணி: அவரது சொத்து மதிப்பு
உலகில் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் பெண்மணியாக மாறியுள்ளார் பிரான்சின் Francoise Bettencourt Meyers என்பவர்.
100.1 பில்லியன் டொலர் தொகை
பிரான்சின் L'Oreal என்ற மிகப் பிரபலமான நிறுவனத்தின் தற்போதைய வாரிசான Francoise Bettencourt Meyers-ன் சொத்து மதிப்பானது கடந்த வியாழனன்று 100.1 பில்லியன் டொலர் தொகையை எட்டியது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் சமீப வாரங்களில் பெரும் ஏற்றத்தை அளித்த நிலையிலேயே Bettencourt Meyers-ன் சொத்து மதிப்பும் உச்சம் கண்டது.
இருப்பினும் இன்னொரு பிரஞ்சு நிறுவன தலைவரான Bernard Arnault என்பவரை விட குறைவு தான் என்றே கூறப்படுகிறது. ஆடம்பர பொருட்களின் சில்லறை வர்த்தக நிறுவனமான LVMH-ன் நிறுவனரான இவரது மொத்த சொத்து மதிப்பு 19,980 கோடி அமெரிக்க டொலர்.
சந்தை மதிப்பானது 268 பில்லியன் டொலர்
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார் பெர்னார்ட் அர்னால்ட். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரை விடவும் பெர்னார்ட் அர்னால்ட் மிகப் பெரிய செல்வந்தர் என்றே கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் பிரபலமான L'Oreal நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை Bettencourt Meyers தன் வசம் வைத்துக்கொண்டுள்ளார். L'Oreal நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பானது 268 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 70 வயதான Bettencourt Meyers தற்போது 12வது இடத்தில் உள்ளார். இவரது இரு மகன்களும் திரைத்துறையில் செயல்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |