உலகின் பணக்கார யூடியூபர்களில் ஒருவரான இந்திய பெண்: அவரின் மொத்த சொத்து மதிப்பு
இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த லில்லி சிங், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்தபட்ச ஊதியம் பெறும் வெறும் சாதாரண ஊழியராகவே இருந்துள்ளார்.
உலகின் பணக்கார யூடியூபர்
தற்போது 34 வயதாகும் லில்லி சிங் உலகின் பணக்கார யூடியூபர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2016ல் அதிக சம்பளம் வாங்கும் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார்.
@timesofindia
மிக சாதாரணமாக, குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் ஊழியராக தமது வாழ்க்கையை தொடங்கியவர் லில்லி சிங். 2010ல் தொழில்முறை யூடியூபராக களமிறங்கிய லில்லி சிங், அதன் பின்னர் 'சூப்பர்வுமன்' என்ற புனைப்பெயரில் உலகளவில் பிரபலமானார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த லில்லி சிங், கனடாவுக்கு புலம்பெயர்ந்ததுடன், தமது தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்தும் நோக்கில் அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடியேறினார்.
அவரது காணொளிகள் பொதுவாக, ஊக்கமளிக்கும் குறிப்புகள், தினசரி செயல்பாடுகள் பற்றிய vlogகள், ஸ்கிட்ஸ் என பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இருபாலின ஈர்ப்பாளர்
2015ல் அவுஸ்திரேலியா, துபாய், ஹொங்ஹொங், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு தொழில்முறை சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டார். மேலும், தாம் ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என்பதை 2019ல் வெளிப்படையாக அறிவித்தார்.
Credit: Taylor Hill
அமெரிக்காவில் 6,000 சதுர அடி கொண்ட அவரது குடியிருப்பின் மொத்த மதிப்பு 4.1 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் அவரை உலகில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபராக இருமுறை பட்டியலிட்டுள்ளது. லில்லி சிங்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |