Bajaj அறிமுகப்படுத்தும் உலகின் முதல் CNG Bike.., வெளியான முக்கிய அறிவிப்பு
Bajaj நிறுவனத்தின் உலகின் முதல் CNG Bike அடுத்த 3 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் Bajaj நிறுவனத்தின் பைக்குகளை பொதுமக்கள் பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு நல்ல பெயர் பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது இடத்தை பிடிப்பதற்காக Bajaj நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் உலகின் முதல் CNG Bike -யை அறிமுகப்படுத்துவது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.
எப்போது அறிமுகமாகும்?
இதுகுறித்து ராஜீவ் பஜாஜ் கூறுகையில், "Hero மற்றும் Honda நிறுவனங்கள் செய்ய முடியாத விடயத்தை Bajaj நிறுவனம் செய்கிறது. Bajaj தயாரித்துள்ள CNG Bike மூலம் குறைவான எரிபொருள் மட்டும் தான் செலவாகும். அடுத்த காலாண்டில் இந்த பைக்கானது விற்பனைக்கு அறிமுகமாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "50 முதல் 65 சதவீதம் வரை எரிபொருள் செலவு மற்றும் வாகனத்தை இயக்குவதற்கான செலவு குறையும். Petrol engine வாகனத்தை விட அதிகளவு மாசு ஏற்படாது" என்று பேசியுளளார்.
அதன்படி பார்த்தால் அடுத்த மூன்று மாதங்களில் CNG Bike விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் வந்தால் பெட்ரோல் பைக்குக்கு சவாலாக இருக்கும். ஆனால் CNG -க்கான எரிபொருள் நிரப்பும் மையங்கள் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CNG எரிபொருளை பயன்படுத்தும் போது 90 % மீத்தேன் அல்லாத ஹைட்ரோ கார்பன் மாசுகளாக வெளியாகின்றன. இதில், மீத்தேன் உடன் கூடிய ஹைட்ரோ கார்பன் மாசுகளாக இருந்தால் அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |