உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியல்: மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜேர்மன் நகரம்
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஜேர்மனியின் தலைநகரான பெர்லின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜேர்மன் நகரம்
ஐந்து காரணிகளின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் என்னும் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன: குடிமக்கள், ஆட்சி முறை, சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து என்பவையாகும்.
பெர்லின், குடிமக்கள், பொருளாதாரம் என்னும் பிரிவுகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது, அடுத்தபடியாக போக்குவரத்திலும் நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, கார் கூட இல்லாமல், ரயில்கள், ட்ராம்கள் மற்றும் பேரூந்துகள் உதவியுடன் பெர்லின் நகரை சுற்றிவருவது மிகவும் எளிது என்கிறார்கள் நகர மக்களில் பெரும்பான்மையோர்.
சைக்கிள்களில் செல்வோருக்காக தனியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது, நகர மக்களால் ஒரு ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
விலைவாசி
விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும், பெர்லின் நகரில் வாழ்வது கடினமல்ல என்று கூறும் நகரவாசி ஒருவர், வீடு, உணவு மற்றும் சேமிப்பு என பல விடயங்கள் மற்ற ஐரோப்பிய நகரங்களை ஒப்பிடும்போது அதிகமில்லை என்கிறார்.
உண்மையில், பல ஐரோப்பிய நகரங்களை ஒப்பிடும்போது, பெர்லினில் வீட்டு வாடகையும் குறைவு ஆகும்.
சில புகார்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை
அதே நேரத்தில், அதிகம் முகம் கொடுத்து பேசாத அக்கம்பக்கத்தவர்கள், மோசமான வானிலை, அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் என சில பிரச்சினைகள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
முதலிடம் பிடித்த நகரம் எது?
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த நகரம் டென்மார்க்கின் Aarhus நகரம். இரண்டாவது இடம், சுவிட்சர்லாந்தின் சூரிச்சுக்கு. பிரித்தானியாவின் லண்டனுக்கு பட்டியலில் 33ஆவது இடம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |