கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை: எதற்காக? எங்கே உள்ளது தெரியுமா?
கொசுக்களுக்கு தொழிற்சாலை இருப்பது உங்களுக்கு தெரியுமா?
கொசு தொழிற்சாலை
பிரேசில் நாட்டின் São Paulo மாகாணத்தில் உள்ள Campinas பகுதியில் உலகின் மிகப்பெரிய கொசுத் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு வாரத்திற்கு சுமார் 1.9 கோடி Aedes aegypti கொசுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கு காரணம் கடந்த 2024ம் ஆண்டு பிரேசிலில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே என கூறப்படுகிறது.
அதாவது உலகில் மொத்த டெங்கு தொற்றாளர்களில் 80 சதவிகிதத்தினர் பிரேசிலில் என கண்டறியப்பட்டது, இதற்காக விஞ்ஞானிகள் தீர்வை கண்டறியவே கொசுக்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டனர்.
இவை டெங்கு, சிகா, சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கொசுக்களின் உடலில் Wolbachia என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் அளிக்காத வகையில், கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் பெருகுவதை தடுக்கிறது.
என்ன காரணம்?
அதனால் மனிதரை இந்தக் கொசுக்கள் கடித்தாலும் டெங்கு வைரஸ் பரவாது என்று கூறப்படுகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் Aedes aegypti வகை கொசுக்கள் இனப்பெருக்கத்தின் போது Wolbachia பாக்டீரியாவை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதால், பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த அரசு இந்த செயல்முறையை பல நகரங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம், அங்கு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து இந்த திட்டம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே மேலும் சில நாடுகளில் இந்த நடைமுறையை எதிர்பார்க்கலாம்.