உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்... அம்பானிக்கே செக் வைத்த அந்த ஜோடி யார்?
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த செலவுடன் திருமணம் செய்துள்ளதாக ஒரு ஜோடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலையுயர்ந்த திருமணம்
பொதுவாகவே அனைவரது வீட்டிலும் நடக்கும் பிரமாண்டமான நிகழ்வென்றால் அது ஒருவரின் திருமணம் தான். செலவு எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என ஒவ்வொரு பெற்றோர்களும் திருமணத்தை செய்து வைப்பார்கள்.
அந்தவகையில் உலகிலேயே அதிகமான செலவில் ஒரு திருமணத்தை செய்து முடித்துள்ள ஜோடிகள் வைரலாகி வருகின்றனர்.
இந்த திருமணமானது 'நூற்றாண்டின் திருமணம்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
கார் டீலர்ஷிப் வியாபரத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மேடலைன் ப்ரோக்வே, ஜேக்கப் லாக்ரோனை பாரிஸில் இந்த திருமணத்தை செய்துக்கொண்டுள்ளனர்.
அவர்களின் பிரமாண்டமான திருமணத்தின் வெளிப்பாடு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர்களின் திருமணமானது ஒரு வாரம் முழுவதும் நீடித்துள்ளன.
ஆடம்பரமான ஆடைகளை அணிந்து, அவர்களது பிரத்யேக திருமண ஆடைகளுடன் ஒரு பேஷன் திருமணத்தை செய்துள்ளனர்.
அனைத்து விருந்தினர்களும் தனிப்பட்ட ஜெட் விமானங்களில் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மதிப்புமிக்க வெர்சாய்ஸ் அரண்மனையில் இந்த திருமணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க இசைக்குழுவான மரூன் 5 நிகழ்ச்சியுடன் விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இந்த திருமணத்திற்கு மாத்திரம் ரூ.491 கோடி செலவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |