உலகிலேயே அதிக சக்தி கொண்ட காய்கறி.., எது தெரியுமா?
பொதுவாக , சத்தான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அன்றாட உணவில் காய்கறிகள் அவசியம்.
காய்கறிகளில் பழவகை காய்கறிகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள் மற்றும் அவரை வகைகள் என பல வகைகள் உள்ளன.
இவை நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
அந்தவகையில், உலகிலேயே சக்தி வாய்ந்த காய்கறி எது என்பது குறித்து பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மலைப்பகுதிகளில் காணப்படும் லிங்கட் என்ற காய்கறி, உலகின் மிகச் சக்திவாய்ந்த காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இறைச்சி மற்றும் மீனை விட கூட அதிக சத்துக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த லிங்கட் காய்கறி உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசம் போன்ற மலைப்பகுதிகளில் இயற்கையாக வளர்கிறது.
இதில் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த காய்கறியைச் சாப்பிடுவதால் இரத்தக் குறைபாடு நீங்குவதுடன், இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கும் திறனும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த காய்கறியில் கலோரி மற்றும் கொழுப்பு மிகக் குறைவாக இருப்பதால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதை உண்ணலாம்.
1 கப் லிங்கட் காய்கறியில் 6 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 2 மில்லிகிராம் இரும்பு, 31 மில்லிகிராம் வைட்டமின் C, 8 கிராம் கார்ப்ஸ் மற்றும் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
இதில் சக்திவாய்ந்த கொழுப்பு அமிலங்கள் மற்றும் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |