உலகில் அதிகம் தேடப்படும் கைப்பை எது தெரியுமா? பிரபலங்கள் பயன்படுத்தும் Brikin handbags ரகசியம்
ஹெர்ம்ஸ் பிர்கின்(Hermès Birkin) பைகள் எப்போதும் ஆடம்பரத்தின் உச்சமாக கருதப்படுவது, அதன் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை முதலீட்டாளர் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது.
பிரமிக்க வைக்கும் ஏல விலைகள்
சமீபத்திய ஏலங்களில் பிர்கின் பைகளின் விற்பனை விலை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

நேரடியாக பயன்படுத்தப்பட்ட ஜேன் பிர்கின் பைகள் அல்லது கையெழுத்திட்ட பிளாக் பாக்ஸ் பிர்கின் 40(Black Box Birkin 40) ஆகிய ரக பைகளின் விலை சமீபத்திய சோத்பி(Sotheby’s) ஏலத்தில் சுமார் $ 2.9 மில்லியன் டொலாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப ஏல விலையானது வெறும் $440,000 மட்டுமே ஆகும்.
முன்னதாக ஜூலை மாதம் நடைபெற்ற ஏலத்தில் ஜேன் பிர்கின்(Jane Birkin) முதல் பை சுமார் $ 10 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டு உலக சாதனை படைத்தது.
இந்த அதிகப்படியான விலை பிர்கின் பைகளின் தரம் மற்றும் கைவினைக் திறனுக்காக மட்டும் வழங்கப்படுவது இல்லை.
பிர்கின் பைகளை வைத்துள்ள அந்த பிரபலத்தின் மீதான ஈர்ப்பு காரணமாகவும் ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விலை சரிவை சந்திக்கும் பிர்கின் மற்றும் கெல்லி பைகள்
அதே சமயம் பிரபலங்களுடன் தொடர்பு இல்லாத சாதாரண பிர்கின் மற்றும் கெல்லி பைகள் விலைகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் இருந்த பொருளாதார மந்த நிலை காரணமாக இவை அதிக விலைக்கு விற்பட்டதாகவும், தற்போது உலக நாடுகளிடையே பொருளாதார நிலைத்தன்மை அதிகரித்து வருவதால் பிர்கின் மற்றும் கெல்லி பைகளின் ஏல விலைகளில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |