உலகின் பழமையான மியூசியம் கஃபே எங்குள்ளது தெரியுமா?
உலகின் பழமையான மியூசியம் கஃபே பிரித்தானியாவில் அமைந்துள்ளது.
லண்டனில் உள்ள விக்டோரியா & ஆல்பர்ட் மியூசியத்தில் (V&A Museum) உலகின் மிக பழமையான மியூசியம் கஃபே அமைந்துள்ளது.
1868-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அழகான கஃபே, 150 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
ஜேம்ஸ் கேம்பிள், வில்லியம் மொரிஸ் மற்றும் எட்வர்ட் பொய்ன்டர் (James Gamble, William Morris and Edward Poynter) ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த கஃபே, விக்டோரியன் காலத்தினை பிரதிபலிக்கும் நகைச்சுவையான அலங்காரங்களை கொண்டுள்ளது.
பாரிய விளக்குகள், வண்ணமயமான கண்ணாடி ஜன்னல்கள், பாரிய வளைவுகள் மற்றும் வண்ணமயமான டைல்ஸ்களால் அலங்கரிக்கப்பட்ட தரைகள் இங்கே காணலாம்.
கஃபே மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கேம்பிள் ரூம், பொய்ன்டர் ரூம் மற்றும் மொரிஸ் ரூம் என ஒவ்வொன்றும் தனித்துவமான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கம்பிள் ரூம் அலங்காரங்கள் Renaissance Revival style-ல் கட்டப்பட்டுள்ளது. பொய்ன்டர் ரூம் டச்சு பாணியில் நீல நிற ஓடுகளைக் கொண்டுள்ளது. மொரிஸ் ரூம் கோதிக் மற்றும் எலிசபெத்தன் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
V&A கஃபே இப்போது செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இங்கே காபி, கேக், pastry வகைகள், சாலடுகள், சாண்ட்விச், ஸ்கோன்ஸ் மற்றும் சிறப்பு தேநீர் வகைகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
World’s oldest museum cafe, Victoria and Albert Museum cafe, V&A museum cafe history, Oldest cafes in London, Victorian era cafes UK, Historic museum cafes, V&A Gamble Room Morris Room Poynter Room, Best museum cafes in the world, London cultural attractions, Things to do in London museums