உலகின் 3 நாடுகளை கடந்து நீண்ட தூரம் பயணிக்கும் ஒரே ரயில்: எது தெரியுமா?
ரயில் பயணங்கள் என்பது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான்.
குறைந்த விலையில் குடும்பத்தோடு நாடு முழுக்க சுற்ற ஏற்றது ரயில் பயணங்கள் தான்.
அந்தவகையில், 3 நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஒரு ரயில் அழைத்துச்செல்லும் என்பது பற்றி தெரியுமா?
டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289km தொலை தூரம் வரை அமைத்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து கிழக்கில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரம் வரை செல்கிறது.
உலகின் மிக நீளமான ரயில் பாதை இது. ஒரே பாதை ஐரோப்பிய ஆசியக் கண்டங்களை இணைக்கிறது.
டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மேற்கே தொடங்கி சீனாவின் எல்லை மற்றும் ஜப்பானின் எல்லையைத் தொடுகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்தால் உலக வரைபடத்தில் பாதியைக் கடக்கலாம். வருடம் முழுவதும் இந்த ரயில் செயல்படுகிறது.
மாஸ்கோவில் இருத்து விளாடிவோஸ்டாக் வரை செல்ல 3 வகுப்பு பயணச்சீட்டின் விலை 13,982 ரூபாய். 2 வகுப்பு பயணச்சீட்டின் விலை 17,018 ரூபாய் ஆகும்.
டிரான்ஸ்-சைபீரியன் ரயில் 18 நிலையங்களில் கடந்து 8 நேர மண்டலங்களை தாண்டி செல்கிறது.
மாஸ்கோ - விளாடிவோஸ்டாக், மாஸ்கோ - உலன்படோர், மாஸ்கோ - பெய்ஜிங் என்று மூன்று பிரிவுகளை இணைக்கிறது.
அதில் நீங்கள் எந்த வழியில் பயணம் செல்ல விரும்புகிறீர்களோ அதற்கான விசாவை பெற வேண்டும்.
இந்த ரயிலில் ரஷ்யாவில் இருத்து தொடங்கி சீனா செல்ல வேண்டுமென்றால் ரஷ்யா மற்றும் சீனா நாட்டிற்கான விசாவை வாங்கவேண்டும்.
இதற்கான பயணச்சீட்டை மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையத்திலேயே எடுத்துக் கொள்ளலாம். மேலும் இணையம் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |