உலகின் மிக உயரமான குடியிருப்பு கோபுரம்.., எத்தனை அடி உயரம் தெரியுமா?
உயரமான கட்டடங்களுக்கு பெயர் பெற்ற பிரேசிலின் பால்னேரியோ கம்போரியில், உலகின் மிக உயரமான குடியிருப்பு கோபுரம் தற்போது கட்டப்படவுள்ளது.
1,670 அடி (509 மீட்டர்) உயரமுள்ள "சென்னா டவர்" பிரேசிலின் சிறந்த ஃபார்முலா ஒன் ஓட்டுநர் அயர்டன் சென்னாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தின் கட்டுமான பணிக்கு சுமார் ரூ.4,700 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மத்திய கோபுரம், உலகின் மிக உயரமான குடியிருப்பு வானளாவிய கட்டடமாகும். இதன் உயரம் 472.4 மீட்டர்.
மத்திய கோபுரத்தை விட சென்னா டவர் 36.6 மீட்டர் உயரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அயர்டன் சென்னா, மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் உள்ள மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
சென்னா மெக்லாரனுடன் இணைந்து மூன்று ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இந்நிலையில், சென்னா 1994ல் ஒரு பந்தய விபத்தில் உயிரிழந்தார்.
பளபளக்கும் கண்ணாடி, வானளாவிய கட்டடம் மற்றும் அதன் உச்சியில் இயங்கும் விளக்குகள் ஆகியவை இரவில் நகரத்தை பிரகாசிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |