இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்திய அணி அசத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்தே உச்சத்தை இந்தியா தொட்டுள்ளது.
ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தமாக 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி டிரா ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 54.17 சதவீத வெற்றி விகிதம் மற்றும் 26 புள்ளிகளுடன், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தலா 50% வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து அணி 29.17% வெற்றி விகிதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது.