உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன்

Pakistan Qatar India Ukraine Saudi Arabia
By Karthikraja Jun 30, 2025 08:45 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

உலகில் அதிகளவு ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடனில் உள்ள SIPRI என அழைக்கப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், உலகளவில் ஆயுதங்கள், ஆயுத இறக்குமதி போன்றவற்றை கண்காணித்து, அது தொடர்பாக ஆய்வறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

2020 - 2024 வரையிலான காலக்கட்டத்தில், 162 நாடுகளை கண்காணித்து, உலகின் முதல் 10 பெரிய ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உலகளவிலான ஆயுத இறக்குமதியில் 35% சதவீத பங்கை முதல் 5 நாடுகள் வைத்துள்ளது. 

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

உக்ரைன்

இந்த பட்டியலில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில், 8.8 சதவீதத்துடன் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

2022 ஆம் ஆண்டு ரஷ்யா உடன் தொடங்கிய போரை தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட 35 நாடுகளிடமிருந்து உக்ரைன் ஆயுத இறக்குமதி செய்துள்ளது.

இந்தியா

8.3 சதவீதத்துடன் இந்தியா ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் உள்ளது. 

2015 -19 காலகட்டத்தில் 9.3 சதவீதமாக இருந்தது, கடந்த 5 ஆண்டு காலத்தில் சரிவை சந்தித்துள்ளது. உள்நாட்டில் ஆயுத உற்பத்தி செய்வதே இந்த சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

இந்தியா தனது ஆயுதங்களை 38 சதவீதம் ரஷ்யாவிடமிருந்தும், 28 சதவீத ஆயுதங்களை பிரான்ஸிடமிருந்தும் பெறுகிறது. மேலும், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

கத்தார்

வளைகுடா நாடான கத்தார், 6.8 சதவீதத்துடன் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

கத்தார் தனது பெருமளவிலான ஆயுதங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது. 

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட்

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட்

சவுதி அரேபியா

முன்னர் முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியா, தற்போது 6.8 சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிடமிருந்து அதிகளவிலான ஆயுதங்களை சவுதி அரேபியா இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தான்

4.6 சதவீதத்துடன், பாகிஸ்தான் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், பாகிஸ்தான் பாரிய அளவிலான ஆயுத இறக்குமதியைத் தொடர்ந்து செய்து முதல் 5 இடங்களில் உள்ளது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில் சீனா 81% பங்களிப்பையும், நெதர்லாந்திடமிருந்து 5.5% மற்றும் துருக்கியிடமிருந்து 3.8% இறக்குமதி செய்கிறது.

ஜப்பான்

3.9 சதவீதத்துடன், ஜப்பான் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2020 மற்றும் 2024 காலகட்டத்தில் ஜப்பானின் ஆயுத இறக்குமதி 93% அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியா

3.5 சதவீதத்துடன், அவுஸ்திரேலியா இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

இதில், 80 சதவீத ஆயுதங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

எகிப்து

3.3 சதவீதத்துடன், எகிப்து இந்த பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​எகிப்து தனது ஆயுத இறக்குமதியை 44 சதவீதம் குறைத்துள்ளது.

அமெரிக்கா

3.1 சதவீதத்துடன், அமெரிக்கா இந்த பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. 

உலகளவிலான ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் உக்ரைன் | World Top 10 Arms Import Country Ukraine Top India

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்தாலும், சில சிறப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்கா இறக்குமதியையே சார்ந்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து, அமெரிக்கா அதிக அளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது.

குவைத்

2.9 சதவீதத்துடன், குவைத் இந்த பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது.        

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US