உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்: மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ள நாடு
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
காரணம் என்ன?
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், அதற்கு காரணமாக ஐந்து விடயங்கள் கூறப்படுகின்றன.
US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அந்த பட்டியலில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் உயர் வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலைத்தன்மை, கல்வி அமைப்பு, சிறந்த தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை சீராக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் என்னும் ஐந்து விடயங்கள், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்க காரணமாக அமைந்துள்ளன.
அத்துடன், குறைவான வேலையின்மை மற்றும் குடிமகன் ஒருவருக்கான உயர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், நாட்டின் வலிமையான பொருளாதாரம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், உலகிலேயே குற்றச்செயல்கள் குறைவான நாடு என்னும் பெருமையும் கொண்ட நாடு தங்கள் நாடு என பெருமையுடன் கூறிக்கொள்கிறது சுவிட்சர்லாந்து.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |