தற்போது உலகின் சிறந்த மற்றும் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனம் எது தெரியுமா?
உலகளவில் பல நிறுவனங்கள் செல்போன்கள், ஸ்மார்ட் போன்களை தயாரிக்கிறது. 2022-2023 ல் உலகின் சிறந்த செல்போன் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
ஏனெனில் இந்த நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் அளவு அதிகமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களின் கூற்றுபடி 2022 இல் உலகின் டாப் 3 செல்போன் நிறுவனங்களின் பட்டியலை பார்ப்போம்.
1.Samsung
ஸ்மார்ட்போன் உலகின் ராஜாவாக சாம்சங் நிறுவனம் திகழ்கிறது. இது உலகின் சிறந்த தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றாகும். இது உயர்நிலை ஸ்மார்ட்போன்களுடன் அடிப்படை அம்ச தொலைபேசிகள் உட்பட அனைத்து வகையான மொபைல் போன்களையும் தயாரிக்கிறது.
இந்நிறுவனம் 1938 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நிறுவப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டு தனது முதல் மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தைகளில் தொடர்ந்து ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
provscons
2.Huawei
Huawei இன்று சந்தையில் இருக்கும் பழமையான மொபைல் போன் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது 1997 முதல் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது.
Huawei இன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன.
3.Apple
ஆப்பிள் தனது செல்போன்களை ஐபோன் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. Apple நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகு, 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதல் ஐபோனை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆசியாவில் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்போது, ஒவ்வொரு ஆண்டும், ஒரு ஐபோன் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Apple