உலக பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டி! தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
உலக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு FISU, இந்த அமைப்பின் சார்பில் விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான இன்று இந்தியா தங்க பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
அதாவது, இந்திய மகளிர் அணியான மனு பாக்கர், யஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அபித்யா பாட்டீல் ஆகியோர் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இளவேனில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதேபோன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தனி நபர் பிரிவில் மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றி மூலம் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |