பிரித்தானியாவில் மறைந்திருந்த 2ம் உலகப் போர் கால ரகசிய சுரங்கம்: வீட்டின் பின்புறம் கிடைத்த அதிசயம்
பிரித்தானிய பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
ரெபேக்கா ஹாப்சனின் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் உள்ள கென்ட்(Kent) மாகாணத்தின் ஃபோக்ஸ்டோன்(Folkestone) அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரெபேக்கா ஹாப்சன்(Rebecca Hobson) என்ற பெண்மணி, தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம்(World War II-era bomb shelter) ஒன்றை கண்டுபிடித்து அதிசயித்தார்.
ரெபேக்கா வீட்டின் தோட்டத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் குண்டு தங்குமிடம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு வரை அதை ஆராயமாக இருந்த ரெபேக்கா ஹாப்சன், தனது துணைவர் டாரன் உடன் இணைந்து இந்த தகவலை ஆராய முடிவு செய்துள்ளார்.
மறைந்திருந்த சுரங்கப்பாதை
இதையடுத்து தோட்டத்தின் பின்புறத்தில் இருந்த கல் ஒன்றை தூக்கி மண்ணுக்குள் மறைந்திருந்த பாதையின் நுழைவாயைக் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த சுரங்கப்பாதை 160 அடி நீளமுள்ள ஒரு பிரமிக்க வைக்கும் சுரங்கப்பாதை என்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கடந்த காலத்தின் சாட்சிகள்
சுரங்கப்பாதையை ஆராய்ச்சி செய்தபோது, கட்டமைப்பு மட்டுமல்லாமல், கடந்த காலத்தின் சான்றுகளையும் அவர்கள் கண்டறிந்தனர்.
உள்ளே கிடைத்த பழைய செய்தித்தாள் துண்டுகள், இந்தத் தங்குமிடம் சுமார் 200 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடமாக இருந்ததையும், இரண்டாம் உலகப் போரின் போது கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தன்னார்வ தொண்டர்களால் கட்டப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தின.
ரெபேக்காவின் இந்தக் கண்டுபிடிப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |