19 வயதில் ரூ 9100 கோடி சொத்து மதிப்பு... உலகிலேயே இளம் வயது கோடீஸ்வரர்: யாரிந்த லிவியா
இளம் வயதிலேயே பெரும் கோடீஸ்வரர் அந்தஸ்துக்கு வருவது என்பது அரிதான சாதனை. இருப்பினும் சிலர் அந்த சவாலை முறியடித்து சாதனை புரிகின்றனர்.
இளம் வயது கோடீஸ்வரர்
அப்படியான ஒருவர் 19 வயது கல்லூரி மாணவியான Livia Voigt. பிரேசில் நாட்டவரான லிவியா சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், உலகிலேயே இளம் வயது கோடீஸ்வரர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மின் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான WEG-ல் லிவியாவுக்கு மிக மிக குறைவான எண்ணிக்கையிலான பங்குகள் உள்ளது. WEG நிறுவனமானது லிவியாவின் மறைந்த தாத்தா Werner Ricardo Voigt என்பவர் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனமாகும்.
இதனால் அந்த நிறுவனத்தில் 19 வயதேயான லிவியாவுக்கும் பங்கு கிடைத்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 9100 கோடி.
லிவியா மட்டுமின்றி, அவரது மூத்த சகோதரிக்கும் இதே அளவு சொத்து மதிப்பு உள்ளது. அவரும் ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதுவரை இளம் வயது கோடீஸ்வரர் என்ற பட்டத்தை இத்தாலியின் Clemente Del Vecchio என்பவர் தக்கவைத்திருந்தார்.
6 பில்லியன் அமெரிக்க டொலர்
அவரிடம் இருந்து வெறும் இரண்டு மாதங்கள் இளையவரான லிவியா பட்டத்தை கைப்பற்றியுள்ளார். லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மின் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான WEG-ல் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரர்களில் ஒருவர் லிவியா.
தற்போது பல்கலைக்கழக மாணவியான லிவியா, இதுவரை WEG-ன் நிர்வாக குழுவில் இதுவரை இணையவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்ட பொது வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனமாகும் WEG.
கடந்த 2022ல் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், இளம் வயது கோடீஸ்வரர்கள் பட்டியலில் Zerodha நிறுவனர்களான நிதின் மற்றும் நிகில் காமத் சகோதரர்களும் Flipkart நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |