டி20 உலக கோப்பையில் படுதோல்வியுடன் வெளியேறிய இந்தியா! இனி தினேஷ் கார்த்திக் நிலை என்ன?
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறிய நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் பெரிதாக சோபிக்கவில்லை.
தினேஷ் கார்த்திக்கின் லட்சியம் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை பெற்றுகொடுக்க வேண்டும் என்பதுதான். இது நிறைவேறவில்லை.
Action Images via Reuters
அடுத்து, 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஆகையால், தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் விளையாடுவதற்கு இனி தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திகு போட்டியாக இந்திய அணியில் கருதப்படும் ரிஷப் பண்ட் பார்ம் அவுட்டால் திணறுவதால் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆகவே அவர் இப்போதைக்கு ஓய்வு முடிவை அறிவிக்க மாட்டார் என்பதே விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.