டி20 உலக கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கை தூக்கிட்டு அவரை ஏன் சேர்த்தீங்க? சேவாக் கோபம்
உலக கோப்போயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை நீக்கியதற்கு சேவாக் அதிருப்தி.
அது அவரின் நம்பிக்கையை குலைக்கும் என கருத்து.
உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை அணியில் சேர்ந்த இந்திய அணி நிர்வாகத்தை சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.
உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 12ன் கடைசி போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் வீரேந்திர சேவாக், அரையிறுதிக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்காமல் போனது அவர் நம்பிக்கையை குலைக்கும்.
AFP
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் ஆட்டத்தில் அவரை விளையாட வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால் இந்த பிரச்சனை அவருக்கு வரலாம்.
டி20 உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தான் வேண்டும் என நினைத்த நீங்கள் தொடர் முடியும் வரையில் அவரை அணியில் வைத்திருக்க வேண்டும்.
அவரை பெஞ்சில் உட்கார வைப்பது நல்லதல்ல, இதுவரை சரியாக ரன்களை அவர் எடுக்காததால் அவருக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.