உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்! தமிழனுக்கு போட்டியாக நிற்கும் ஒரு வீரர்
உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட்.
இருவருக்கும் போட்டி நிலவும் நிலையில் இருவரையும் ஆட வைப்பேன் என கூறும் சுனில் கவாஸ்கர்.
உலகக்கோப்பை டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் ஆட வைப்பேன் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் வெலனில் இடம்பெறுவது தொடர்பாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் அது எதிரொலித்தது.
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் ஒரு சேர அணியில் ஆட வைக்க முடியுமா என கேள்விகள் வருகின்றன.
mykhel
இது குறித்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், நான் என்னுடைய ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைப்பேன். 5வது இடத்தில் ரிஷப் பண்ட், 6வது இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யா, 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக்கை ஆட வைப்பேன்.
இந்திய அணி நல்ல அணி. மேலும் சமநிலையான அணி. உலக கோப்பையை அவர்கள் வெல்வார்கள் என அதிக நம்பிக்கை உள்ளது. ஆசிய கோப்பையில் நடந்தது ஒரு எச்சரிக்கை.
அவர்கள் உலக கோப்பையின் மூலம் மீண்டு வருவார்கள் என நான் நம்புகிறேன். தேர்வு செய்த அணியை நாம் ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Twitter