உலகக்கோப்பை கிரிக்கெட்! அதிரடியாக அரை சதம் விளாசிய இலங்கை வீரர் நிசாங்கா
உலகக்கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் கருணாரத்னே இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. இலங்கை தொடக்க வீரர்களான பதும் நிசாங்காவும் குசால் மெண்டிஸும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மெண்டிஸ்.
முதல் 6 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என உயர்ந்தது. நிசாங்கா தொடர்ந்து நன்கு விளாடிய ஸ்கோரை உயர்த்தினார். 33 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
[FZ3029
இந்த உலகக் கோப்பையில் அவருடைய 2-வது அரை சதம் இது. எனினும் 16-வது ஓவரில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிசாங்கா. கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கையால் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணி தனது அற்புதமான பந்துவீச்சால் இலங்கையை அதிக ரன்கள் எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தியது.
இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அவுஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka finish on 141/8.#SLvENG #RoaringForGlory pic.twitter.com/pGN1ptZjg7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 5, 2022