டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்! இலங்கை அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி
உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் வென்ற இலங்கை.
நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி.
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சமீரா, பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக லஹிரு குமாரா, பினுரா இலங்கை அணியில் இடம்பெற்றார்கள்.
இலங்கை அணி பவர்பிளேயின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரில் நெதர்லாந்து அணிக்கு இரு விக்கெட்டுகள் கிடைத்தன. பால் வான் மீகரன் முதலில் இலங்கை பேட்டர் பதும் நிசாங்காவை 14 ரன்களில் போல்ட் செய்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். நடுவரின் தீர்ப்பை அவர் டிஆர்எஸ் முறையீடு செய்யவில்லை. ஆனால் அந்தப் பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது பிறகு தான் தெரிந்தது. இதனால் டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால் தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார்.
Sri Lanka ?? Wins !
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) October 20, 2022
Sri Lanka won the T20 World Cup match against Netherlands ?? by 16 runs. NED 146/9. Kusal Mendis 79.https://t.co/HTihH2D0gf #LKA #T20WorldCup #T20WorldCup2022 #SLvNED
இலங்கை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் ஆடிய நிலையில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியின் குசல் மெண்டீஸ் 79 ரன்களும், அசலங்கா 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.
Sri Lanka are through to the #T20WorldCup Super-12 stage! ?#RoaringForGlory #SLvNED pic.twitter.com/Q9EmnrKXpz
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 20, 2022
நெதர்லாந்து அணி ஆரம்பம் முதல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.இதையடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கையின் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
Another 3️⃣-wicket haul for Wanindu Hasaranga! ???#RoaringForGlory #SLvNED #T20WorldCup pic.twitter.com/iex1qaBYYt
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 20, 2022