பிரித்தானியாவில் நிலத்தடி சுரங்கத்தில் தூங்கலாம்.! உலகின் ஆழமான ஹோட்டல் திறப்பு
பிரித்தானியாவில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்கள் தூங்க அனுமதிக்கும் 'உலகின் ஆழமான ஹோட்டல்' திறக்கப்பட்டுள்ளது.
விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில், 400 மீட்டர் நிலத்தடியில் தூங்குவதற்கு மக்களை அனுமதிக்கும் புதிய ஹோட்டல் பிரித்தானியாவில் திறக்கப்பட்டுள்ளது.
'உலகின் ஆழமான ஹோட்டல்' என்று அழைக்கப்படும், டீப் ஸ்லீப் ஹோட்டல் வடக்கு வேல்ஸில் Eryri தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படும் Snowdonia மலைகளுக்கு அடியில் அமைந்துள்ளது.
Go Below
டீப் ஸ்லீப் ஹோட்டலில் நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் மற்றும் இரட்டை படுக்கையுடன் கூடிய குகை உள்ளது, இது வாரத்தில் ஒரு நாள், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடகைக்கு எடுக்கமுடியும். அதன் அறைகள் பூங்காவின் உயரமான மலைகளுக்கு கீழே 1,375 செங்குத்து அடி (419 மீ) உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
தங்குமிடத்தை அடைய, விருந்தினர்கள் முதலில் ஒரு கைவிடப்பட்ட விக்டோரியன் ஸ்லேட் சுரங்கத்தின் வழியாக பயணத் தலைவருடன் மலையேற வேண்டும்.
Go Below
இந்த சுரங்க பயணத்தில், பண்டைய சுரங்க படிக்கட்டுகள், பழைய பாலங்களை கடந்து செல்ல வேண்டும். ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது, ஒரு பயிற்றுவிப்பாளர் சுற்றுச்சூழலைப் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார். விருந்தினர்களுக்கு பயணத்திற்கு முன் ஹெல்மெட், லைட், சேணம் மற்றும் பூட்ஸ் ஆகியவை வழங்கப்படும்.
ஒரு பெரிய இரும்பு கதவு வந்துவிட்டால் பயணம் முடிந்தது, ஹோட்டல் அறையின் நுழைவாயிலை அடைந்துவிட்டோம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
Go Below
இங்கு அனைத்து வகையான உணவுகளும் பானங்களும் வழங்கப்படும். ஒரு தனியார் கேபினில் இருவர் தங்குவதற்கு ஒரே இரவில் 350 பவுண்டுகள் ஆகும், அதே சமயம் குகையில் இருவர் தங்குவதற்கு விலை 550 பவுண்டுகள் என நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது .
இந்த ஹோட்டலை நடத்தும் Go Below நிறுவனம் அதன் செயல்பாடுகளை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது.