உலகின் மின்சார தேவையில் பெரும்பகுதியை இதன் மூலமே சந்திக்கலாம்: சுவிஸ் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள பாஸிட்டிவ் தகவல்
உலகின் மொத்த மின்சார தேவையில் பெரும்பகுதியை ஏரிகளிலிருந்து கிடைக்கும் மீத்தேன் மூலமாகவே சந்திக்கலாம் என்கிறார்கள் சுவிஸ் ஆய்வாளர்கள்.
கார்பன் டை ஆக்சைடைவிட, பருவநிலையை 25 மடங்கு அதிகம் பாதிக்கம்கூடியது மீத்தேன் வாயு. அது பெரும்பாலும் பெட்ரோலியம் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமே உருவாகும் என்றாலும், இயற்கையாகவே ஏரிகள் மீத்தேனை உருவாக்குகின்றன என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
அதாவது, ஏரிக்குள்ளிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இறந்து அழுகும்போது மீத்தேன் உருவாகும். பேச்சு வழக்கின்படி, இந்த மீத்தேன் மொத்த உலகின் மின்சாரத் தேவையையும் சந்திக்க போதுமானது என்று கூட கூறமுடியும் என்கிறார்கள் பேஸல் மற்றும் சூரிச்சைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
ஆனால், இதுவரை உலகிலேயே ஒரே ஒரு இடத்தில்தான் ஏரிகளிலிருந்து மீத்தேன் எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
அது மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள Kivu ஏரியிலிருந்துதான். சுவிட்சர்லாந்தில் இயற்கை மற்றும் செயற்கை ஏரிகள் ஏராளம் காணப்படும் நிலையில், சுவிட்சர்லாந்து மீத்தேனிலிருந்து மின்சாரம் தயாரிக்க உகந்த நாடு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
என்றாலும், இதற்கு சற்று காலமாகும், ஏனென்றால் மீத்தேன் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் என்றாலும், அதை ஏரியிலிருந்து பிரித்தெடுப்பதால், ஏரியின் சுற்றுச்சூழல், அதிலுள்ள தவாரங்கள் மற்றும் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகுமா என்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்கவேண்டும்.
மற்றொரு முக்கிய விடயம், மீத்தேனை உருவாக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களால் உருவாக்கப்படும் biomass மிக மெதுவாகவே உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.